கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். இன்று வேலுச்சாமி புரத்தில் துயர சம்பவம் நடந்த இடத்தை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.