கரூர் தைலா கார்னர் பகுதியில் நகைப்பட்டறையில் வேலை பார்க்கும் இளையராஜா (29) நேற்று மாலையில் தனது நகை பட்டறையிலிருந்து சொக்க தங்கம், 2 மோதிரங்களை எடுத்துக்கொண்டு மற்றொரு நகை பட்டறைக்கு சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து விட்டது. இளையராஜா புகாரை பெற்று கொண்ட கரூர் நகர போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, காமராஜ் மார்கெட் அருகில் கீழே கிடந்த நகைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்து அவரிடமிருந்து நகைகளை மீட்டு இளையராஜாவிடம் ஒப்படைத்தனர்.