கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகாதார ஆய்வாளர் பலி

2பார்த்தது
கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகாதார ஆய்வாளர் பலி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ராஜபுரத்தைச் சேர்ந்த 39 வயதான அருண்குமார், நாமக்கல் மாவட்டம் குடசேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று மலையம்பாளையம் பிரிவு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பின்புறமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் மதுசூதனன் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி