கரூர் துயர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளும், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் 2 அலுவலர்களும் இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் செயல்படும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களிடம் உறுதிப்படுத்தும் நோக்கில் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.