வஞ்சிநாதன் நகரில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாஞ்சிநாதன் நகர் பகுதியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணி, தார் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.