கரூர் வெண்ணமலை கோவில் நிலம் சீல் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சேலத்தைச் சேர்ந்த திருதொண்டாற்று சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கோவில் நிலத்தில் வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதை உறுதிப்படுத்த நேரில் வந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து ராதாகிருஷ்ணனின் வாகனத்தை சிறைப்பிடித்து, தொடப்பத்தைக் காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் போலீசார் தலையிட்டு ராதாகிருஷ்ணனை குண்டுகட்டாக தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.