புகலூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த கோகுலகண்ணன் (53) மே 15 அன்று நொய்யல் குறுக்கு சாலை பேக்கரி அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது, பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசிய நபர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலடியாக, அவர்கள் கோகுலகண்ணனை தகாத வார்த்தையால் திட்டி, கையால் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகம், தாடை மற்றும் பற்களில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் தருண் மற்றும் பெயர் தெரியாத 25 வயது நபர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.