கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் 48 நில அளவை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.