எம்.எல்.ஏ. பழனியாண்டி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.