கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கூட்ட நெரிசலில் காயம் அடைந்த நபர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடமும் விசாரணை ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.