கரூரில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை

1பார்த்தது
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இன்று கரூர் சிபிஐ அலுவலகம் வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற உள்ளது. மேலும், சிபிஐ இதுவரை மேற்கொண்ட விசாரணையை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, எஸ்பி ஜோஸ் தங்கையா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி