தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூர் ஆத்தூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் சிறப்புரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் முதல் அரசியல் எழுச்சி மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடவும், இதில் எஸ்சி, எஸ்டிக்கு இரண்டு தொகுதிகள், பொது தொகுதிகளில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு தலா ஒரு தொகுதி என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நீதிக்கட்சி தயாராக உள்ளது.