கரூர்: பாஜக, அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

427பார்த்தது
கரூர்: பாஜக, அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்
கரூர் மாநகராட்சியில் உள்ள 42, 43, 44 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள், அக்கட்சிகளில் இருந்து விலகி, கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். 

கரூர் தெற்கு நகர பாஜக இளைஞரணி மண்டலத் தலைவர் மகேஷ் குமார் தலைமையில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் இந்த இணைப்பு நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி