கரூர்: சிபிஐ அதிகாரிகள் ஆறாவது நாளாக தொடர் விசாரணை

644பார்த்தது
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆறாவது நாளாக ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், காயமடைந்த ஆண்டாங்கோவிலை சேர்ந்த முரளி கிருஷ்ணன் மற்றும் வடிவேல் நகரை சேர்ந்த முகமது நபி ஆகியோரும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடமும் அடுத்ததாக விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி