கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வணிகக்கடை உரிமையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவத்தன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.