கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக 306 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (நவம்பர் 4) காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட 20 பேர் விசாரணைக்கு ஆஜராகி, எழுத்துப்பூர்வமாகவும், சிலரிடம் வீடியோவாகவும் வாக்குமூலம் அளித்தனர்.