கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி ரமேஷின் மகன் சரண்ஜித் நிகில் (18), கோவையில் அனிமேஷன் படித்து வந்தார். நண்பர்களுடன் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மாணவரின் சடலத்தை மீட்டனர். கரூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.