சட்டமன்றத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக ஜோதிமணி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். சர்வே என்ற பெயரில் ஊழல் நடைபெற்றதாகவும், நீண்டகாலம் பணியாற்றியவர்களைப் புறக்கணித்துவிட்டு, வெற்றி வாய்ப்பில்லாத பலருக்குத் தொகுதிகள் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடு மட்டுமே என விமர்சித்துள்ளார்.