கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக நிர்வாகிகள், இந்திய அரசின் நறுமணப் பொருள் வாரியத்தில் (SPICES BOARD) இந்திய அளவில் மொத்தமுள்ள 23 உறுப்பினர்களில் ஒருவராகபாஸ்கர் சொக்கலிங்கம் மத்திய அரசு நியமித்திருப்பதை வரவேற்றுள்ளனர். அவரை, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், துணைத் தலைவர் பால்ராஜ், லோகநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நறுமணப் பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும், ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்தவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.