தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து, தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், அரசியலில் கூட்டணிகள் சேர்வதும் பிரிவதும் இயல்பானது. திமுகவும் 2014ல் காங்கிரஸை வெளியேற்றியது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பரஸ்பர மரியாதையுடன் பிரிவது நல்லது, என்று கூறியுள்ளார்.