கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்கள் வாடகை அல்லது குத்தகை செலுத்தவும், இல்லையேல் வீடுகளுக்கு சீல் வைக்கவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுமாா் 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை, கோயில் செயல் அலுவலா் சுகுணா தலைமையிலான அதிகாரிகள் ஒரு வீட்டிற்கும் சீல் வைத்தனா்.