கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் 110/11 கி.வோ துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சடையம்பாளையம், கைலாசபுரம், பி கே ஜி நகர், வீரணம்பாளையம், கோவிந்தம்பாளையம், பெரியாண்டாங்கோவில், பெரியார் சிலை, பெரியாண்டங் கோயில் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த மின்தடை வேப்பம்பாளையம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.