கரூர் மாநகராட்சியில் சத்குரு ஸ்ரீல பாலசுப்பிரமணி சுவாமியின் 13ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து, இரவு 6.30 மணியளவில் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு பாலசுப்பிரமணிய சுவாமி படத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் மாட வீதிகளில் திருவீதி உலா வந்தனர். பின்னர், பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு நாட்டிய அஞ்சலி நடைபெற்றதுடன், பொதுமக்களுக்கு நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.