கரூர்: ரூ.5.08 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி

417பார்த்தது
கரூர்: ரூ.5.08 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ரூ. 5.08 கோடி மதிப்பீட்டில் 24 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், நன்னியூர், வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சிகளில் சாலைகள் அமைத்தல், சமுதாயக் கூடங்கள் கட்டுதல், பயணியர் நிழற்குடைகள் அமைத்தல் போன்ற பணிகள் அடங்கும். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி