கரூரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர், போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தோர், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.