கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.