வேலாயுதம்பாளையம் போலீஸார் வாகனச் சோதனையின் போது, காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் (25), ரவீந்திரபால் சிங் (20) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 401 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு புகையிலைப் பொருள்களைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.