மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய தவெகவைச் சேர்ந்த நிர்மல்குமார், இந்த துயரத்தில் இருந்து விஜய் வாழ்நாள் முழுவதும் மீளமாட்டார் என்றும், சதிகார திமுக கும்பலை வரவிருக்கும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.