கரூர்: நீண்ட இடைவெளிக்குப் பின் பரவலாக மழை, விவசாயிகள் மகிழ்ச்சி

1பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தானோன்றி மலை, பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த திடீர் மழையினால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், உழவர் சந்தை காய்கறி வியாபாரிகள் மழையினால் வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி