ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தீர்த்தக் குடம், முளைப்பாரி எடுத்தனர்

1பார்த்தது
கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் வரும் நவம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்றனர். மேளதாளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து வெங்கமேடு ஐயப்பன் கோயில் வரை ஊர்வலம் சென்றது. பின்னர், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி