வடக்கு பாளையம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், மேலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு பாளையம் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகம், வேதிகார்ச்சனை, யாகஹோமம், நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பின்னர் யாகவேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்திற்கு எடுத்துச் சென்று மகா கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு விமர்சையாக நடத்தினர். பின்னர் மகா தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்துவைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.