கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இ-ஃபைலிங் முறையை முற்றிலும் கைவிடக் கோரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டிசம்பர் 3 முதல் 6 வரை மூன்று நாட்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் சங்க செயலாளர், வேலை செயலாளர் மற்றும் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.