கரூர் மாவட்டம், ஜனவரி 9 அன்று, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை ஊதிய உயர்வு, நேரடி வங்கி கணக்கிற்கு ஊதியம் விடுவித்தல், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோருக்கு பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தரம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைமை கீதா கோரிக்கைகளை முன்வைத்தார். வரவேற்புரை ஈஸ்வரி, சிறப்புரை அன்பழகன், அன்பரசு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.