கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர், பகவதி அம்மன், முத்தாலம்மன், கருப்பண்ணசாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று திங்கட்கிழமை, ஐப்பசி மாதம் 24-ம் நாள் (10.11.2025) காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.