கரூரில் பேருந்து படியில் இறங்கிய போது விழுந்தவர் உயிரிழப்பு

2பார்த்தது
கரூரில் பேருந்து படியில் இறங்கிய போது விழுந்தவர் உயிரிழப்பு
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான தொழிலாளி பாலமுருகன், நேற்று தனியார் பேருந்தில் பயணிக்கும்போது, வேலுச்சாமிபுரம் இந்திரா காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றார். அப்போது ஓட்டுநர் கோபிநாத் திடீரென பேருந்தை இயக்கியதால் தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த பாலமுருகன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மனைவி சாந்தியின் புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் ஓட்டுநர் கோபிநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.