நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 58 வயதான மனோகரன், கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் சாலையில் நடந்து சென்றபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மனோகரனின் சகோதரி லட்சுமி அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.