கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவர் தனது மூன்று சக்கர ஸ்கூட்டியில் நேற்று வெங்ககல்பட்டி ரவுண்டானா அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரிய கருப்பன் ஓட்டி வந்த கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுப்பிரமணியின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.