கோவில் பாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

542பார்த்தது
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் ஊராட்சி கோவில் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை விநாயகர் வழிபாடு மற்றும் யாக வேள்விகளுடன் தொடங்கிய இந்த விழாவில், பின்னர் கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, கடம் புறப்பாட்டுடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.