கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், டவுசர், ஜட்டி அணிந்து, முகத்தை குல்லாயால் மறைத்து, உருட்டுக்கட்டை, கத்திகளுடன் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டி, 4 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் கதவு தட்டப்பட்டால் திறக்காமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர்.