கரூர்: புதிய ரேஷன் கடையைத் திறந்துவைத்த எம்எல்ஏ

422பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சின்னதேவன்பட்டி கிராமங்களில் புதிய பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அரசு அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி