கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் மின் வினியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று (செப்.,26) வெளியிட்டுள்ளார். அதில் கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை மற்றும் பாலம்மாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.,27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால், ஒத்தக்கடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோமூர், வேடிச்சிபாளையம், கல்லு பாளையம், நெரூர் வட பாகம், அச்சமபுரம், 16 கல் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும்,பாலம்பாள்புரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ஆலமர தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, காளிபாளையம், கருங்கல்காலனி, லட்சுமி நகர், அம்பாணி கார்டன், எம் கே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (செப்.,27) மின்விநியோகம் இருக்காது என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.