கரூர் வெங்கமேடு அன்னை அஞ்சுகம் தெருவை சேர்ந்த ஆனந்தி (47) தனது மகள் சுபாஷினியுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆனந்தி அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.