கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கார் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு (57). இவர் பிப்ரவரி 19ம் தேதி மாலை 4 மணி அளவில், பசுபதிபாளையத்தில் இருந்து புலியூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். தொழிற்பேட்டை நரிக்கட்டியூர் பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில் சரக்கு வாகனம் வேகமாக வந்து, சிங்காரவேலு ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிங்காரவேலுவின் மனைவி லதா அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரணை செய்த பசுபதிபாளையம் காவல்துறையின, சரக்கு வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.