கரூர் மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 7 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளன. கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் இதனைத் தொடங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் நூலக அலுவலர் சிவக்குமார், வாசகர் வட்ட தலைவர் தீபம்சங்கர், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், கரூர் கிளை சிறையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 41 சிறைவாசிகள் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் கலைமுதுமணி துரைராஜ், வட்டாட்சியர் ஜெகமணி, சிறை கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.