கரூர் மாவட்டம் புலியூரில் புதிய மாநில வரி அலுவலர் அலுவலகம் இன்று (பிப்ரவரி 13) தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமிசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஒ செயலாளர் ரகுநாதன், புலியூர் பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன், துணை ஆணையர் கீதா, மாநில வரி அலுவலர் சாரங்கம் பாரதி, உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவிப் பொறியாளர் பாரதி உள்ளிட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.