கரூர் மாவட்டம் புகலூர் வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (49) என்பவர் நேற்று வேலாயுதம்பாளையம் சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத கேரள மாநில பதிவு எண் கொண்ட பைக் மோதியதில் வலது காலில் பலத்த காயமடைந்தார். அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.