திண்டுக்கல் கொட்டநத்தம் வசந்த கதிர் பாளையத்தைச் சேர்ந்த மணி (34) என்பவர் நேற்று கோடாங்கி பட்டி சர்வீஸ் சாலையில் ராயல் புல்லட்டில் சென்றபோது, சிக்னல் இன்றி நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் மணி தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மனைவி சக்தி அளித்த புகாரின் பேரில், தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.