கரூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டிங் தொழிலாளி உயிரிழப்பு

496பார்த்தது
கரூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டிங் தொழிலாளி உயிரிழப்பு
மண்மங்கலம் தாலுக்கா புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருணகிரி (39) வாங்கலம்மன் பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மே 27 சின்னகுளத்து பாளையத்தில் உள்ள உறவினரின் கோழி கடையில் வேலை பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி