பயணியர் நிழற்குடை திறப்பு: ரூ. 11.75 லட்சம் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது

0பார்த்தது
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், தரகம்பட்டி ஊராட்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 11.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க. சிவகாமசுந்தரி கலந்துகொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். உடன் ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன் மற்றும் முன்னாள் சேர்மன் கஸ்தூரி தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புதிய நிழற்குடை தரகம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.