கரூர் ரயில் நிலையம் வழியாக கோவையிலிருந்து மதுரை, நாகர்கோயில் செல்லும் 16322 எண் கொண்ட ரயில் இன்று ரத்து செய்யப்பட்டதால், மதுரை, நாகர்கோவில் செல்ல வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாற்றுத் தளத்தில் ரயில் இயக்கப்படுவதாக கரூர் ரயில் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.